அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் உள்ளவர்கள் தொடர்பில் வௌிப்படுத்தல்
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அபராதத் தொகையை செலுத்த முடியாமல் மொத்தமாக 1,454 கைதிகள் உள்ளார்கள்.
தொண்டு நிறுவனங்கள் சிறு குற்றங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தி அவர்களை விடுதலை செய்ய ஒத்துழைப்பு வழங்கியுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அபராதத் தொகை
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2026.08.12ஆம் திகதியளவில் அனைத்து சிறைச்சாலைகளிலும் 10611 கைதிகளும், 28408 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைகளில் 20-30 வயதுக்குட்பட்ட 2160 கைதிகளும், 30-40 வயதுக்குட்பட்ட 3423 கைதிகளும், 40-50 வயதுக்குட்பட்ட 2860 கைதிகளும், 50-60 வயதுக்குட்பட்ட 1561 கைதிகளும் 60-70 வயதுக்குட்பட்ட 601 கைதிகளும்.
70-80 வயதுக்குட்பட்ட 150 கைதிகளும், 80 வயதுக்கு மேற்பட்ட 11 கைதிகளும் சிறையில் உள்ளனர்.
10000- 15000 ரூபா வரையான அபராதத் தொகையை செலுத்த முடியாமல் 421 கைதிகளும், 15000 - 25000 ரூபா அபராதத் தொகையை செலுத்த முடியாமல் 220 கைதிகளும், 25000- 50000 ரூபா அபராத தொகையை செலுத்த முடியாமல் 361 கைதிகளும், 50000 -100000 ரூபாவை செலுத்த முடியாமல் 245 கைதிகளும், 01 இலட்சத்துக்கு மேற்பட்ட அபராதத் தொகையை செலுத்த முடியாமல் 207 கைதிகளும் சிறையில் உள்ளார்கள்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அபராதத் தொகையை செலுத்த முடியாமல் மொத்தமாக 1454 கைதிகள் உள்ளார்கள்.
தொண்டு நிறுவனங்கள் சிறு குற்றங்களுக்கான அபராத தொகையை செலுத்தி அவர்களை விடுதலை செய்ய ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.