மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய மின்தடை; வழமைக்கு திரும்பியது
நாட்டில் பல பிரதேசங்களில் இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத்து துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சாரம் தடைப்பட்டதன்பின்னர் கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் , தொலைத்தொடர்பு இணைப்புகள் மோசமாக இருந்தன.
அதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் பலவற்றில், நீண்ட வரிசைக்காக சாரதிகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில், தற்பொழுது மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு மின்சாரம் இப்போது வராதாம்: வெளியான அறிவிப்பு