மட்டக்களப்பில் கோயிலுக்கு சென்று திரும்பிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் தொடர்பில் தெரிய வந்தவை
இந்த விபத்தில் 35ஆம் கொலனி, பக்கியல்ல பகுதியை சேர்ந்த சச்சி என்னும் 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் என்னும் 23 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்துள்ளதாகவும் ஏனைய நபர் படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் விபத்துத் தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.