அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை ஆராயப்படுகின்றது
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி பல்வேறு துறைகளில் சேவை புரிகின்ற அரச அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விசேட வைத்தியர்கள், தாதியர்கள், ரயில் சாரதிகள்
இதில், விசேட வைத்தியர்கள், தாதியர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்டவர்கள் அடங்குகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம் புத்தாண்டில் அரச ஊழியர்கள் மிகுந்த பொறுப்புடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாகவும், அரச ஊழியர்கள் செயல் திறன் மிக்கவர்களாக செயல்படுவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்காகவும் அவர்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.