மாணவர்களை பழிவாங்க வேண்டாம்; ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த கோரிக்கை!
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கை ஆசிரியர் மற்றும் பல்கலைக்கழ பேராசிரியர்கள் ஆரம்பிக்க வேண்டும்.
வரிக்கொள்கையை பயன்படுத்திக்கொண்டு மாணவர்களை பழிவாங்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை கடந்த ஒருமாத காலமாக முன்னெடுத்து வருகின்றனர்.
வரிக்கொள்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. அது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மாத்திரமானதல்ல. இந்த வரிக்கொள்கையில் அரச துறையில் 5வீதமானவர்களே உள்வாங்கப்படுகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் ஆசிரியர் சங்கம் பல்கலைக்கழ பேராசிரியர் சங்கம் இதனை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் காரணமாக கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.
விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கையில் கலந்துகொள்ளும் மதிப்பீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் கொடுப்பனவுள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
என்றாலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆயிரத்தி 400பேர் வரையானவர்கள் விடைத்தால் மதிப்பீட்டு நடவடிக்கையில் கலந்துகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.இவர்களின் இந்த நடவடிக்கையால் தற்போது கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டிருக்கிறது.
எனவே அரசியலுடன் சம்பந்தமில்லாத மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திறக்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும். வரிக்காெள்கையை பயன்படுத்திக்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடக்கூடாது.
அதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டாவது இந்த பணியை அவர்கள் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்றேன் என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சாந்தினி கோங்கஹகே தெரிவித்தார்.