நாட்டில் 60 மருந்துகளுக்கான சில்லறை விலை நிர்ணயம்
நாட்டில் அத்தியாவசிய மருத்துகள் சிலவற்றிற்கு சில்லறை விலையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது,
60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் அதிகபட்ச சில்லறை விலையானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறித்த மருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிகமாக விற்பது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.