அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு! Video)
அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடர்பில் அரச ஊழியர்களின் தொழிற்சங்கம் நிதியமைச்சில் இன்றைய தினம் (10.10.2022), மனுவொன்றை கையளித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கை சுமையை குறைக்குமாறு வலியுறுத்தியும், அரச ஊழியர்களுக்கு போக்குவரத்திற்காக சிறப்பு கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அடக்குமுறைகளை நிறுத்துமாறும், அரச ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் வெளியான வர்த்தமானியை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையிஒல் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.