இலங்கையில் இப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டால் நாட்டை மீட்க முடியாது!
இலங்கையில் மீண்டும் ஒரு அமைதியின்மை ஏற்பட்டால் நாட்டை மீட்கவே முடியாது என யாழ். பல்கலைக் கழக பொருளியல் துறை பேராசிரியர் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது சில பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளன. அதே போன்று எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரம் நிமிர்கிறது என்ற போக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
தற்போது அரசுக்கு வருமான மூலங்கள் கிடைக்கிறது.ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் மூலமும்,சுற்றுலா மூலமும் வருவாய் கிடைக்கிறது.
எதிர்வரும் நாட்களில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் குளிர் காலம் நிலவும். இதனால் நாட்டுக்கு மேலும் பல சுற்றுலா பயணிகள் வரலாம்.
இதனால் நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும். ஆகவே எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் மேலும் குறைக்கப்டுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகிறது.
இது தவிர மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மீண்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்படலாம். இதனால் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து மீண்டும் நாடு இன்னமும் கீழே செல்லும் என்றார்.