மத்தள விமான நிலையம் தொடர்பான அமைச்சரவை அனுமதியை மீள் பரிசீலனை செய்ய தீர்மானம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவம் மற்றும் அங்கு விமான சேவைகள் தொடர்பான நேரடி மற்றும் மறைமுக வர்த்தக முனைவுகளை ஸ்தாபிப்பதற்கு, புதிய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
குறித்த விமான நிலையத்தை, இந்திய மற்றும் ரஷ்ய கூட்டு நிறுவனங்களால் முகாமை செய்வதற்காக 30 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்க முன்னைய அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டது.
இது தொடர்பான உடன்படிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவிருப்பதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் லசந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த உடன்படிக்கையில் காணப்படுகின்ற சில சிக்கல்களே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மத்தள விமான நிலையத்தில் விமான சேவைகள் சார்ந்த புதிய வர்த்தக முயற்சிகளுக்கு புதிய முதலீட்டாளர்களின் ஆர்வ வெளிப்பாட்டைக் கோர தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.