நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார்.
46 வயதான இவர் இன்று சிகிச்சை பலனின்றி சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றவர் அவர் உடல் நிலை மோசமான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மதுரை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார். அதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார்.பின்னர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார்.
சினிமாவில் மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், புலி, வாயை மூடி பேசவும் படங்களால் பிரபலம் ஆனார் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர் , கதை நாயகன் ஆக நடிக்க தயாராகி வந்தார்.
நவம்பரில் வர உள்ள கமல்ஹாசன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடவும், அதை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவர் காலமாகி உள்ளனது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.