நிவாரணம் விநியோகிக்க வந்த இளைஞர்களுக்கு எதிர்ப்பு
நிவாரணம் விநியோகிக்க வந்த இளைஞர்களுக்கு கண்டி மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அனர்த்த நிவாரண பணி
கொழும்பிலிருந்து கண்டிக்கு சென்று, அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்ட இளைஞர்கள் மாநகர சபையை பயன்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டி மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் இடம்பெறும் இவ்விடயத்தை ஏற்க முடியாது என்றும் இதற்கு அனுமதி வழங்கிய ஆணையாளர் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்த அவர்கள், இது சட்டவிரோத வேலை எனவும் குறிப்பிட்டனர்.
அங்கிருந்த மற்றுமொருவர், இவர்கள் NGO காரர்கள் என்றும், பணம் வசூலிக்க வந்ததாக தெரிவிப்பதையும் குறித்த வீடியோ காட்சியில் அவதானிக்க கூடியதாக உள்ளது.