விவாகரத்தால் பிரிந்த தம்பதி; உயிருக்காகப் போராடிய மனைவியை மீட்க கணவர் செய்த நெகிழ்ச்சி!
சீனாவில் ஆடவர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவி உயிருக்காகப் போராடிய நிலையில் அவரை பிரிந்த கணவர் மறுமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி ரத்த சோகையால் உயிருக்குப் போராடியது அவருக்குத் தெரியவந்தது. எனினும் தமது காதலும் கடப்பாடும் அவரைக் காப்பாற்றும் என்று நம்பினார் முன்னாள் கணவர்.
இருவரும் மறுமணம்
முன்னாள் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் இருவரும் மறுமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னர் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு விவாகரத்து செய்துகொண்டதாக கணவர் கூறினார்.
மறுமணம் செய்த பின்னர், அவரது மனைவி அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் , தற்போது மனைவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பிரிந்த பின் தம்பதி மீண்டும் திருமணம் செய்த காணொளியை மில்லியன் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.