மக்களின் மீள்குடியேற்றத்திற்காய் ஒலித்த குரல் இன்று ஓய்ந்தது
யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தனது 77வது வயதில் இன்று உயிரிழந்துள்ளார் .
வலி. வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 32 வருடங்களுக்கு மேல் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வேறுபகுதிகளில் வசித்துவரும் நிலையில் தனது கடைசி காலம் வரையிலும், அந்த மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராடி வந்தவராவார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
மயிலிட்டியை சேர்ந்த 700 மீனவ குடும்பங்களும் பலாலியை சேர்ந்த 2000ம் குடும்பங்களும் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றன,
நாங்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என போராடி வந்த குணபாலசிங்கம், ஜனாதிபதியை சந்தித்து, எங்கள் துயரங்களை முன்வைப்பதற்காக வாய்ப்பை வழங்கவேண்டும் என கடந்த ஒக்டோபர் மாதம் கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
இவ்விலையில் அவரது கோரிக்கை நிறைவேறாத நிலையிலையே அவர் உயிரிழந்துள்ளமை வலிவடக்கு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.