கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் இராஜாங்கனை ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தெதுறு ஓயாவில் 4 வான்கதவுகள் தலா 3 அடி வரை திறக்கப்பட்டுள்ள நிலையில் வினாடிக்கு 8,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

லுணுகம்வெஹெரவில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கிரிந்தி ஓயாவைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அதன் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4,542 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.