சீனாவின் அடுத்த ஆராய்ச்சி ; விண்வெளி நிலையத்தில் ஒட்சிசன் மற்றும் எரிபொருள்
சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நீண்ட கால விண்வெளி ஆய்வு
முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ளனர்.
12 பரிசோதனைகள் டிராயர் வடிவ சாதனத்திற்குள் நடத்தப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் வினையூக்கிகளைப் பயன்படுத்தி கார்பன் டை ஒக்சைட் மற்றும் தண்ணீரை ஒட்சிசனாக மாற்றுகிற அதேநேரத்தில் எத்திலீன், ஹைட்ரோகார்பனை உருவாக்குகிறது.
இது விண்கல உந்துசக்திகளை உருவாக்க பயன்படுகிறது என சீனா மேன்ட் ஸ்பேஸ் (சிஎம்எஸ்) இணையதளம் தெரிவித்துள்ளது. மனித உயிர்வாழ்வதற்கும், விண்வெளியில் ஆய்வு செய்வதற்கும் முக்கியமான தொழில்நுட்ப ஆதரவை இந்த வேலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.