காட்டு யானைகளை பாதுகாக்குமாறு கோரிக்கை ; பொதுமக்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம்
காட்டு யானைகள் அடிக்கடி சுடப்படுவது காட்டுத்துப்பாக்கியால் என வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு கட்டுத்துப்பாக்கிகள் பரவலாகப் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றைப் பயன்படுத்தும் நபர்கள் குறித்து பொதுமக்கள் வனவிலங்குத் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் 1992 என்ற அவசர தொலைபேசி எண்ணின் ஊடாக அவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கலாம்.
அத்தகைய தகவல்களை வழங்கும் மக்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க வனவிலங்குத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வனவிலங்குத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், காயமடைந்த சுமார் 06 காட்டு யானைகளுக்கு வனவிலங்குத் திணைக்களம் தற்போது சிகிச்சை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.