யாழ். நாகவிகாரை விகாராதிபதி விசேட கோரிக்கை!
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி விசேட வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
வடபகுதியில் போதை பொருள் பாவனை
ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடபகுதியில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது ஆனால் அந்த போதை பொருள் இந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கடற்தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தமது படகுகளில் ஏதாவது போதை பொருள் கடத்தப்படுவது தொடர்பில் தகவல் இருந்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுடன், யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு துணை போகக்கூடாது இந்த விடயம் தொடர்பில் மீனவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் விகாராதிபதி தெரிவித்தார்.