புளியம்பொக்கனையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியை அண்மித்துள்ள புளியம்பொக்கனை பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம்காண பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் நேற்று முன்தினம் (31) BGL – 1286 இலக்கம் கொண்ட பஜாஜ் பல்சர் (கறுப்பு, சிவப்பு நிறம்) மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
இந்நிலையில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் வேறு விடயங்களை வைத்து அடையாளம் காணக்கூடியவர்கள் இவர்களை அடையாளம்காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.