தனிமைப்படுத்தப்பட்ட மதுபானசாலை மீண்டும் திறப்பு; அதிகாரிகள் விசனம்
வவுனியாவில் தனிப்படுத்தப்பட்ட மதுபானசாலை அறிவுறுத்தலை மீறி மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த சுகாதரப் பிரிவினர் , மதுக்கடை திறக்கப்பட்டமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று மாலை மதுபானசாலைகளை திறப்பதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியதாக வவுனியாவில் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டது. இதன்காரணமாக மதுபானசாலைகளின் முன்னால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அதிகளவானோர் கூடியிருந்தனர்.
சம்பவம் அறிந்து விரைந்து சென்ற வவுனியா சுகாதாரப் பிரிவினர் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு சில மதுபானசாலைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் நோட்டீஸை அகற்றி, மருகாரம்பளை மதுபானசாலை இன்று திறக்கப்பட்டு (18) வியாபாரம் நடைபெற்றதுடன், அதிகளவிலவானோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது அங்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆனுமதியின்றி திறக்கப்பட்டமை தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய கோவிட் பரம்பல் நிலையிலும் மதுபானசாலைகளின் முன்னால் குடிமகன்கள் கூடுகின்றமை மற்றும் அறிவுறுத்தலை மீறி மதுபானசாலையை திறந்து வியாபாரம் செய்கின்றமை தொடர்பில் சுகாதரப் பிரிவினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.