முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்கு ஆப்பு; 151 பேர் ஆதரவு, 01 எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்றது. சட்டமூலம் மீதான விவாதத்துக்குப் பின்னர், சற்றுமுன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.
எதிராக சாமர சம்பத் தசநாயக்க
இந்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா? என சபைக்குத் தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கேட்டார்.
அப்போது எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினார். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .
அதேவேளை இந்த சட்டமூலத்துக்கு புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவே எதிராக வாக்களித்தார்