புலிகளை நினைவுகூரவே தடை மக்களை அல்ல
புலிகளை நினைவுகூரவே தடை என்றும், மக்களை அல்ல என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, அவர்களது உறவுகள் நினைவேந்தலாம் என தெரிவித்துள்ளார்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையில் எந்த அரசும் தடைவிதிக்கவில்லை. நினைவேந்தல் காலங்களில் விடுதலைப் புலிகளையும் நினைவேந்துவதால்தான் சிக்கல் நிலை ஏற்படுகின்றதாகவும் கூறினார்.
தனித்தனியே நினைவேந்துங்கள்
எனவே தமிழ் மக்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில், போரில் உயிர் நீத்த உங்கள் உறவுகளை, உறவுகள் என்ற ரீதியில் நீங்கள் தனித்தனியே நினைவேந்துங்கள்.
அதைவிடுத்து புலிப்பயங்கரவாதிகளை நினைவேந்தும் நிகழ்ச்சி நிரலுக்குள் நீங்களும் பங்கேற்று உங்கள் உறவுகளை நினைவேந்துவதைத் தவறவிடாவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.