கருக்கலைப்பு செய்திருந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? ஜோதிடம் கூறுவது என்ன!
குழல் இனிது யாழ் இனிது மக்கட் சொல் கேளாதவர் என்பது முதுமொழியாகும். வாழ்வில் நாம் அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும், பிள்ளைகள் இல்லையென்றால் பெற்ற செல்வம் அனைத்தும் வீணாகிவிடும்.
வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும்
எம் கடந்த தலைமுறையினனர் குழந்தை பெற்றுக்கொள்வதை இறைவன் கொடுக்கும் பேறாக கருதினர். வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என திருமணம் ஆனவுடன் குழந்தை பெற்றுக்கொள்வதை மிக மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ஆனால் தற்போதைய நவநாகரீக காலத்தில் இளம் தம்பதியினர் கடந்த தலைமுறையினரைப் போல் திருமணம் ஆனவுடன் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில்லை.
திருமணமான பிறகு எப்போது குழந்தை பெற்றுக்கொள்வேண்டும் என அவர்கள் தீர்மானிக்கின்றனர். அவர்கள் திருமானித்த காலத்திற்கு முன்னரே கர்ப்பமாகிவிட்டால் அப்படியான சிலர் தங்களது வயிற்றில் உருவாகும் சிசுவை தெரிந்தோ தெரியாமலோ கலைத்து விடுகிறார்கள்.
இதற்கு அவர்கள் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும்.அது இந்த பிறவியில் அவர்கள் செய்த பாவச் செயலாகவே கருதப்படுகிறது. அதனால் அவர்களுக்கு தோஷம் உண்டாகிறது. நினைத்த காரியத்தில் தடை ஏற்படுவது.
வளமையாக வந்துகொண்டிருந்த வருவாயில் தடை உண்டாவது.. எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டு மனத்தை அலைகழிக்கும். இதற்கு பலர் பரிகாரங்கள் இல்லையா? என கேட்பர். இதற்கு சோதிட நிபுணர்கள் பரிகாரங்களை கூறியுள்ளனர்.
பரிகாரம்
அதாவது தம்பதிகள் கருக்கலைப்பு செய்திருந்தால்.. அதற்கு. அரசாங்க அனுசரனையுடன் இயங்கும் வைத்தியசாலையில் தங்கி பிரசவம் பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டு நாட்கள் சேவைகள் செய்யவேண்டுமாம்.
அல்லது சிறிய குழந்தைகள் படிக்கும் பாலர் பாடசாலையில் தங்கி, அங்கு கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு இரண்டு நாட்கள் சேவைகள் செய்ய வேண்டுமாம்.
இந்த செயல்களை கருகலைப்பினால் ஏற்பட்ட தோஷம் துரவேண்டும் என மனமுருகி செய்தால்.. உங்களது தோஷம் குறைந்து, மீண்டும் பழைய உற்சாகம் ஏற்படுவதையும் அனுபவத்தில் உணரலாம் என்கின்றார்கள் .