சீகிரியா சுவரை சேதப்படுத்திய 21 வயது யுவதிக்கு விளக்கமறியல் உத்தரவு
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தம்புள்ளை மாவட்ட நீதிபதி நிலந்த விமலரத்ன முன்னிலையில் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதி சீகிரியாவில் உள்ள கண்ணாடி சுவரில் தமது ஹேர்பின்னை பயன்படுத்தி ஆறு ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய இந்த யுவதி தொழிற்சாலை ஊழியர்கள் குழுவுடன் சிகிரியவுக்கு சுற்றுலா சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீகிரிய கண்ணாடிச் சுவர் ஒரு பாதுகாக்கப்பட்ட உலக பாரம்பரியங்களில் ஒன்றாகும். அதைத் தொடுவது, எழுதுவது அல்லது சேதப்படுத்துவது கட்டாயம் தடைசெய்யப்பட்டுள்ளது. தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் தளத்தில் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.