கனடாவில் இலங்கைத் தமிழர் மீது பகீர் குற்றச்சாட்டுக்கள்; வெளியான தகவல் !
கனடாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட 44 வயதான மதப்பிரசாரகர் மீதே யோர்க் பிராந்திய பொலிஸார் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். சந்தேக நபர் மீது 7 பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆன்மீகக் கற்கை அமர்வுகளில் பாலியல் வன்கொடுமை
எனினும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரிக்கப்படவில்லை. சந்தேக நபர், இரண்டு கிரேட்டர் டொராண்டோ பகுதி சமூகங்களில் உள்ள குடியிருப்புகளிலவைத்து “ஆன்மீக ஆய்வு அமர்வுகள்” என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 2024 ஆண்டுவரை, பிக்கரிங் மற்றும் மார்க்கம் பகுதிகளில் இவர் நடத்திய ஆன்மீகக் கற்கை அமர்வுகளின் போது ஒருவர் ஆறு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேபோல கடந்த டிசம்பரில் இன்னொருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட தை அடுத்து சந்தேகநபர் மீதான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்மீது பாலியல் வன்முறை முறையீடுகளை வழங்கிய இரண்டு முறைப்பாட்டாளர்களின் அடையாங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் முறைப்பாட்டாளர்கள் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம்
சந்தேக நபரான நிழற்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் இவரது பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதோடு சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸ் சிறப்பு பாதிக்கப்பட்டவர்கள் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களை வழங்குபவர்களின் விபரங்களின் இரகசியம் பாதுகாப்பபடும் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கனடாவில் பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளிப்பதில் வரம்புகள் எதுவும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ள பொலிஸார், சம்பவங்கள் எப்போது நடந்தன என்பதைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் இயல்புடைய எந்தவொரு சம்மதமற்ற தொடர்பையும் உள்ளடக்கியது என்று பொலிஸார் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.