யாழ் கடற்கரையோரங்களில் ஒதுங்கிய சடலங்களில் ஒன்று மாயம்! பொலிஸார் மறைத்தார்களா?
யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியிருக்கும் நிலையில் 5 சடலங்களே பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் முதலாவதாக வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரையில் கடந்த மாதம் 16ம் திகதி கரையொதுங்கிய சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என கூறி பொலிஸார் புதைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரையொதுங்கிய சடலங்கள் யாருடையவை என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதன் காரணமாக குறித்த சம்பவம் பெரும் குழப்பத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் மருத்துவர் என கூறப்படும் ஒருவரின் அறிவுறுத்தலில் மணற்காடு பகுதியில் கரையொதுங்கிய சடலம் சிம்பன்ஸி குரங்கின் சடலம் என கூறப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் அது குறித்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை யழ் கடற்கரையில் 5 சடலங்களே கரையொதுங்கியதாகவும், அவை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.