மின் கட்டணத்துக்கு நிவாரணம்!
கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சார கட்டண நிவாரணம் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மத வழிபாட்டுத் தலங்கள்
முன்னர், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அலகொன்றுக்கு 65 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொது நோக்க பிரிவின் கீழ் மத வழிபாட்டுத் தலங்கள் கொண்டுவரப்பட்டு, கட்டணத்தை திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கிணங்க, 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு அலகொன்றுக்கு 32 ரூபாய் அறவிடப்படும் என்றும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் செயற்படுத்தப்படும் என்றார்.
மேலும் இந்த விடயம் இலங்கை மின்சார சபை மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.