வெளியானது யாழ் - கொழும்பு விமான கட்டணம்; திகைப்பில் மக்கள்!
கொழும்பு - இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரு வழிப் பயணத்திற்கு 22,000 ரூபாவாகவும், இரு வழி பயணத்திற்கு 41,500 ரூபாவாகவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
70 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும்
அதன்படி இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Delighted to announce DP aviation will commence its domestic operation starting flights to Jaffna from 1st July , Sri Lanka tourism is working closely with DP aviation to add more domestic routes in next comming months #dpaviation #srilankatourism #srilankacan pic.twitter.com/0GJ0jfVRtD
— Harin Fernando (@fernandoharin) June 22, 2023
உள்நாட்டு விமான சேவைகள் குறித்து டிபி ஏவியேஷன் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து பயணி கள் 70 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு நான்கு விமானங்கள் சேவையில் ஈடுபடும் என்பதுடன், பயணிகள் 7 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.