2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வரி செலுத்துவதற்கு தகுதியான அனைவரும் 2023மற்றும் 2024 ஆண்டுக்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிக்கையிள் ஊடாக இதனை தெரிவித்துள்ளது
குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்துவத்றகு தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படும் என்பதுடன் தள்ளுபடி செய்தல் அல்லது குறைக்கப்பட மாட்டாது எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என்பதுடன் அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்துக்கு சென்று மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
குறித்த திகதிக்கு பின்னர் செலுத்தப்படாத தவறுகையில் உள்ள வரிகளுக்கு உள்நாட்டு இறைவரி சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்கலாக கடுமையான சேகரிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது