இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!
தீவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 10 மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பின்வரும் பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 3ஆம் நிலை (சிவப்பு) எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளது.
இரத்தினபுரில் உள்ள வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை பகுதிக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டியில் உள்ள தெல்தோட்டை பிரதேசத்திற்கு முதல் நிலை எச்சரிக்கையும், தொலுவ மற்றும் பஸ்பாகே கோரளைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுவரெலியாவில் உள்ள கொத்மலை பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு கீழே...

