சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்!
சென்னைக்கு அதி கனமழைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளதனால், பெரும்பாலான பகுதிகளில் தரைக்காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் ,
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தரைக்காற்று 30-35 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் மூலம் மரங்கள் சாய்வதும் விளம்பரப் பலகைகள் விழுவது போன்ற சம்பவங்கள் ஏற்படும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
எனினும் தற்போது சென்னையில் அதி கன மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் குறிப்பிட்டார். சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும், இருந்தாலும் காற்றுக்கும் கனமழைக்குமான ரெட் அலர்ட் தொடரும் என்றும் கூறினார்.
இதேவேளை ஆபத்தை உணராமல் மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்களை பொலிஸார் வெளியேற்றி வருகின்றதாகவும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.