தனிமையில் வசித்து வந்த நபர் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு
தனியாக வசித்து வந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு, பிலியந்தலை தும்போவில பிரேதேசத்திலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சரத் தந்தநாராயன என்ற 60 வயது நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டதால், அவருடன் பணியாற்றிய ஊழியர் ஒருவர் வீட்டிற்கே சென்ற பார்த்தபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.