வீதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! சந்தேகத்தில் பொலிஸார்
Kandy
Sri Lanka Police Investigation
Crime
Death
By Shankar
கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலமானது கொஹாகொட வீதியில் உள்ள கிளை வீதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் ரிடிகஹபெல, ஹல்ஒலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் வாகனம் ஒன்றில் மோதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மரண விசாரணைகளுக்கு பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கண்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US