வவுனியா மாவட்டத்தில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்!
வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 1500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் ஆணையாளருமான பீ.ஏ.சரத்சந்திர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் இன்றையதினம் (16-09-2024) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் தினத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக 1500ற்கும் மேற்ப்பட்ட பொலிஸார் வவுனியாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.