திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி புனரமைப்பு
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் சேதமடைந்த இறால் குழி பிரதேசத்தின் வீதியை நேற்று (02) மாலை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 800 மீட்டர் வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நிலையில் இன்று (3) அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் வீதியை புணரமைக்கும் பணியினை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் ஊடான முழுமையான போக்குவரத்தினை இயல்பு நிலைக்கு கொண்டுவர துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் போன்ற சிறியரக வாகனங்கள் பயணிக்கின்ற அதேவேளை நண்பகலுக்குள் பாரிய வாகனங்களும் பயணிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராவின் விரைவான பொறுப்பு மிக்க நடவடிக்கைக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


