அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான காரணம் இது தான்..
சமகாலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இக்கட்டான சூழ்நிலையிலும் கூட பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் நுகர்வோர்கள் இன்னும் பாதிக்க கூடாது என்ற ரீதியாக அரசாங்கத்தினால் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
அந்த வகையில் நாட்டினுடைய பொருளாதாரத்தினை முன்னிறுத்தி செல்லுவதுதான் காலத்தின் மிக அவசியம் என தெரிவித்தார். ஐ.நா சபையின் இவ்வாண்டுக்கான அமர்வு இன்று கூடவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.நா சபைக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பில் ஊடகவியலாளரினால் வினவப்பட்ட கேள்விக்கு அங்கஜன் இராமநாதன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
மக்களை இன்னும் இன்னும் திசை திருப்பாமல் எங்களால் முடிந்த முயற்சியினை செயற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வர வேண்டும். மக்கள் இந்த காலகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்தார்.