பதவி விலகளிலிருந்து பின் வாங்கிய அலி சப்ரி....காரணம் என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவி ஆகியவற்றை இராஜினாமா செய்யும் முடிவை நீதி அமைச்சர் அலி சப்ரி மீளப்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளன.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியை தொடர்பில் அரசாங்கம் தன்னுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை என்பதால் நீதி அமைச்சர் அலி சப்ரி கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும் இந்த செயலணியின் தலைமைப்பதவி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த அதிருபுத்திகளின் வெளிப்பாடாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சு பதவியை துறக்கும் நோக்கில் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த செயலணியானது தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாகவும், நீதி அமைச்சின் ஆலோசனை இன்றி சட்டக்கட்டமைப்பு மாற்றப்படாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதன் பின்பே அலி சப்ரி தனது முடிவிலிருந்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது.