சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயார்; கூட்டமைப்பு (Video)
நாடு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கும் இந்த காலகட்டத்தில் சர்வ கட்சியின் தேவையை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து தெரிவிக்கையில், “சர்வகட்சி அரசாங்கம் உருவாகும் எனில் நாங்கள் நாட்டு மக்களின் நன்மை கருதியும் நாட்டின் சூழ்நிலை கருதியும் சில நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய தயாராக உள்ளோம்.
எனினும் கடந்த காலங்களில் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுகளில் அவர்களை ஏமாற்றியுள்ளனர். இதனை நல்ல அனுபவமாக கொண்டு,யாரிற்கும் நாங்கள் எழுந்தமானமாக ஏமாற்றுத்தனமாக ஆதரவு தருவதற்கு தயாராக இல்லை”எனவும் அவர் கூறினார்.