சுகாதார அமைச்சு பதவி தொடர்பில் ராஜித வெளியிட்ட தகவல்
அமைச்சரவை எதிர்காலத்தில் மாற்றம் செய்யப்பட்டு சுகாதார அமைச்சு பதவி கிடைத்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றை பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டு, எனக்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார். நான் இவ்வாறு தெரிவிப்பதன் மூலம் ஊடகங்களில் வரும் பதிலை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்க முடியும்.
அதேபோன்று சிலர் அரசியலுக்காக எடுக்கும் தீர்மானம் மற்றும் சிலருக்கு அது பணத்துக்காக எடுத்த தீர்மானமாக காணலாம். பணத்துக்காக தீர்மானம் எடுப்பவர்களும் இருக்கலாம்.
இருப்பினும், நாங்கள் எப்போதும் தீர்மானம் ஒன்றை எடுத்தால் அது அரசியலை பார்த்தே தீர்மானம் மேற்கொள்வோம். அதனால்தான் மக்கள் எங்களை ஏற்றுக்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.