விராட் கோலியின் அதிரடியில் RCB சாம்பியன் ; அடுத்தடுத்து இருமுறை கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அஹ்மதாபாத்தில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் வொஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் சார்பில் ரசிக் சலாம் தார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தநிலையில் 156 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 75 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2ஆவது முறையாக கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.