கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு!

Mullivaikal Remembrance Day Canada Mark Carney
By Sahana May 23, 2025 08:34 PM GMT
Sahana

Sahana

Report

முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலை விவகாரத்தில், தமிழர் தரப்பிற்கு கனடா ஆதரவுதெரிவித்துள்ள நிலையில், கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளம் குடும்பஸ்தர்

கட்டாரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளம் குடும்பஸ்தர்

அதேவேளை முள்ளிவாய்க்கால் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு இரங்கல் தெரிவித்தமை, இனப்படுகொலை விவகாரத்தில் தமிழர் தரப்பிற்கான ஆதரவு நிலைப்பாடு என்பவற்றிற்காக கனேடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக நன்றி தெரிவித்துள்ளதுடன், கனடாவில் தமிழ் இனப்படுகொலைத் தூபிஅமைத்தமைக்கு பிரம்டன் நகரமேயர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு! | Ravikaran Mp Says He Embracing Canada S Support

தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் எனக் கோருகின்றேன். முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இடம்பெற்று ஒன்றரை தசாப்தகாலம் கடந்திருக்கின்றது. பதினாறு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.

இத்தகைய சூழவில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலை என்னும் பேரவலத்தை/நெருப்பாற்றை கடந்து எஞ்சிய உறவுகள் இறுதிப்போரின் வடுக்களோடும், போரின் கொடுமையான நினைவுகளைச் சுமந்தும் இறுதிப்போரின் சாட்சியாக, தமிழ்இனப்படுகொலையின் ஆதாரங்களாக எமது மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.

தமக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவேண்டும், தமிழினப்படுகொலையை மேற்கொண்டவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதே எமது எமது உறவுகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

இருப்பினும் தமிழினப்படுகொலை இடம்பெற்று ஒன்றரைத் தசாப்தகாலங்கள் கடந்துவிட்டபோதிலும் எமது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எமது மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மற்றும், அநீதி இழைப்பதற்குத் துணைநின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு! | Ravikaran Mp Says He Embracing Canada S Support

இந்நிலையில் வருடந்தோறும் மே-18 அன்று, எமது உறவுகள் தமிழினப்படுகொலையை நினைவு கூருகின்றனர்.

இதன்மூலம் தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோருகின்றனர். அத்தோடு தமிழினப் படுகொலையை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறாக கடந்த 16ஆண்டுகளாக எம்உறவுகள் நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகையசூழலில்தான் கனடாவின் பிரம்டன் நகரத்தில் சிங்க்கௌசி பூங்காவில், தமிழ்இனப் படுகொலையை நினைவுகூரும் வகையிலான தமிழ் இனஅழிப்பு, நினைவுத்தூபி கடந்த 10ஆம் திகதி பிரம்டன் நகரத்தின் மேயர் பற்றிக் பிரவுண் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் 16ஆண்டுகளாக தமிழ்இனப் படுகொலைக்கான நீதியைக்கோரிக்கொண்டு, காத்துக்கொண்டிருக்கும் எமது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு கனடாவின் இச்செயற்பாடு புதிய தெம்பைத்தருவதாக அமைந்துள்ளது.

நீதி கிடைக்குமா? என்று ஏங்கியிருக்கும் எமது உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை தருவதாக உள்ளது. இந்நிலையில் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எமது துயரில் பங்கேற்று ஆறுதல்சொன்ன கனேடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கு வலிசுமந்த மக்களின் பிரதிநிதியாக இவ்வுயரியசபையில் தலைசாய்த்துக்கொள்கின்றேன்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

மேலும் தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை பொறுப்பேற்கச்செய்வதிலும், உண்மை, நீதி கிடைப்பதற்கும் சர்வதேச அளவிலான முயற்சிகள் மற்றும், நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்ற செய்தியானது அவலத்தில் இருந்து மீண்ட எமது மக்களை பேராறுதல் அடையச்செய்கின்றது.

கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள் என இவ்வுயரிய சபையிலிருந்து கனேடியப் பிரதமர் மார்க் கார்னியிடம் எம் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.

தமிழ் இன அழிப்பு விடயத்தில் கனடா எமக்கு ஆதரவுக்கரம் நீண்டியதை வரவேற்பதுடன், கனேடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கும், பிரம்டன் நகரமேயர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன் - என்றார்.

பொலிஸாரிடம் சிக்கிய 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணம்

பொலிஸாரிடம் சிக்கிய 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US