ஐ.நா பிரேரணை தொடர்பில் ரவி விடுத்த தகவல்!
ஜனநாயகத்தை நிலைநாட்டி ஆட்சி பலத்தை பிரித்துக்கொடுத்து செயற்பட வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் புதிய புதிய திருத்தங்களை கொண்டுவராது புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே சிறந்ததாக இருக்கும் என்று நாம் கருதுகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரனை கொண்டுவரப்பட்டமையானது 10 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தொடர்கின்றது.
பிரேரணைகளில் முன்மொழியப்பட்ட விடயங்கள் செயற்படுத்தப்படாததால் இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் எமக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை முற்றிலும் தவறானது என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
22ஆவது திருத்தம் தொடர்பிலான யோசனைகள், கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான திருத்தங்களை கொண்டுவராது புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருமாறே சகலரும் கோருகின்றனர்.
நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்தே நாம் தற்போது சிந்தித்து செயற்படுகின்றோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.