ஶ்ரீ லங்கன் விமானங்களில் எலிகள்; பணி நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவு!
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் ஞாயிற்றுக்கிழமை (25) எலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனை, ஶ்ரீ லங்கன் விமானசேவையின் தலைவர் அசோக் பத்திரகே துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். இது குறித்து அவ்ர் மேலும் கூறுகையில்,
விடுமுறை எடுத்தவர்களை பணிநீக்கம் செய்யுங்கள்
அத்துடன், எலிகள் காணப்பட்ட இரண்டு விமானங்களுக்கு இரசாயனத்தை தெளிக்க வேண்டியிருந்தது. அத்துடன், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ஏனைய இரண்டு விமானங்கள் தாமதமாக சேவையை ஆரம்பிக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எலிகள் எப்படி விமானத்திற்குள் புகுந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால, கேள்வி எழுப்பினார்.
அத்துடன் 15 ஊழியர்கள் இல்லாததும் காலதாமதத்திற்கு காரணம் என தெரியவந்தது. மூன்று ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ள 12 பேர் சாதாரணமாக விடுமுறையை எடுத்துள்ளனர்.
விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் விடுமுறையை எடுத்தவர்களை பணிநீக்கம் செய்யுங்கள் என்று கோபமடைந்த நிலையில், அமைச்சர் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமாக 20 விமானங்கள் மட்டுமே உள்ளன.
அதல் மூன்று விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
நாங்கள் ஐந்து A 330 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளோம், அது விமான சேவைகளுக்கான உலகளாவிய தேவை மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை காரணமாக விமானத்தை கொள்வனவு செய்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.