யாழில் தீவிரமாக பரவும் கொடிய நோய்... இதுவரையில் 121 பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 8 பேரும் எலிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்காகத் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
நேற்றுவரை (18-12-2024) சுமார் 8,300 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.