சூரியன் சனி சேர்க்கையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்
ஜோதிட விதிமுறைகளுக்கமைவாக 12 மாதங்களுக்கு பிறகு சூரியன் - சனி சேர்க்கை நடக்க உள்ளது.
எதிர்வரும் (13.02.2024) ம் திகதி கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆகி சனியுடன் இணையும் நிலையில் சில ராசியினருக்கு பாதகமான விளைவுகள் சந்திப்பார்கள்.
இதனால் எந்தெந்த இராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கடகம்
சூரியனும் சனியும் இணைவதால், கடக ராசிக்காரர்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்.
மேலும் வெளி உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும். உங்கள் தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும்.
இதனால் வீட்டில் சூழ்நிலையும் மோசமடையக்கூடும். உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டிய மாதமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எங்கும் முதலீடு கவனம் தேவை.
முடிந்தால் தவிர்க்கவும். குடும்பத்தில் ஒரு பெரியவரின் உடல்நிலை கவலை தரும்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அதிபதியான சூரியன், சனியுடன் இணைவதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளை அனுசரித்துச் செல்லவும்.
உங்களின் திருமண வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப விஷயத்தால் மன உளைச்சல் ஏற்படலாம்.
குடும்ப உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு தொடர்ந்து பேசுங்கள்.
நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், அந்த முடிவை ஒத்திவைக்கவும். சிலருடன் சேர்ந்து வணிகம் செய்தால், அதில் சில பிணக்குகளைச் சந்திக்க நேரிடும்.
வேலையை முழு கவனத்துடன் செய்து முடிக்கவும்.
விருச்சிக ராசி
சூரியனும் சனியும் இணையக்கூடிய மாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில், குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் மற்றும் சண்டைகள் அதிகரிக்கக்கூடும், வீட்டில் சூழ்நிலை மோசமடையக்கூடும்.
உங்கள் தாயின் உடல்நிலையை முழுமையாக கவனித்துக் கொள்ளவும்.
தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உங்கள் செலவுகளும் கூடும்.
மகர ராசி
மகர ராசி சூரியன் மற்றும் சனி இணைவு, உங்கள் ராசிக்கு தன, வாக்கு ஸ்தானத்தில் நடப்பதால் மகர ராசிக்காரர்கள் தங்கள் பேச்சையும், நடத்தையையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் வீண் பிரச்சனைகளை உருவாகலாம்.
இதன் காரணமாக, தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல வகையான நெருக்கடிகள் ஏற்படலாம்.
முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதற்கான நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் சிந்தனையுடன் முதலீடு செய்யவும்.
அவசரமாக செயல்படுவதும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்கவும். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
கும்ப ராசி
உங்கள் ராசியிலேயே சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை உருவாகிறது என்பதால் உங்களின் உடல்நலம் மற்றும் வருமானத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்த, யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.
தேவையற்ற செலவுகளில் இருந்து விலகி இருந்தால் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதில்லை.
உங்கள் திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகளும் உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீன ராசி
மீன ராசிக்கு விரய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் சனி இணைவு நடக்கிறது.
இதனால் எல்லா வேலைகளிலும் தெளிவாக திட்டமிட்டு செய்யவும். எந்தவிதமான தகராறுகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் சட்ட விஷயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
பயணம் மேற்கொள்வதைத் தள்ளிப் போடுவது நல்லது.