எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் இராசிக்காரர்கள்
ஒருவரின் மன பலம் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்க கூடியதாக இருந்தால், அவர் எந்த இடத்தில் இருந்தாலும், அங்கு அவர் தப்பிப் பிழைத்து தான் விரும்பிய நிலையை அடைந்து விட முடியும்.
ஒருவர் எந்த சூழ்நிலையையும் சமாளித்து பிழைத்து விடக் கூடிய மனநிலையில் இருப்பின், அவரை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.
பொதுவாக திருமண குடும்ப சூழ்நிலை, வேலை பார்க்கும் பணியிடம் என ஒவ்வொரு இடத்திலும் சில நல்ல சூழலும், பல மோசமான சூழ்நிலைகள் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
அப்படிப்பட்ட சூழலில் எந்த ராசியினரின் மனநிலை உறுதியாகவும், எளிதாக பிழைக்க கூடிய வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கடின சூழலை சமாளிக்கும் ராசிகள் கடின சூழலை சமாளிக்கும் ராசிகள் தற்போதுள்ள கலியுகத்தின் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில், ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்கவும், தன் வேலைகளை முடிக்கவும் வேக வேகமாக, மற்றவர்களைப் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
வருங்காலத்தில் வாழ்க்கையே நடத்த சிறப்பான பொருளாதாரம் என்பதை தாண்டி, வரக்கூடிய காலத்தில் உயிர் பிழை தீர்ப்பது பெரிய விஷயமாக இருக்கும்.
அப்படிப்பட்ட சூழலில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம்.
ஒருவருக்கு இந்த இரண்டும் சிறப்பாக அமைந்துவிட்டால், பராமரித்தால் அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து வாழ்ந்து விட முடியும்.
எந்த ஒரு சூழலிலும் சமாளிக்கக்கூடிய வழியை கண்டுபிடிக்கக் கூடிய ராசி நபர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
கும்ப ராசி
கும்ப ராசி கால புருஷ தத்துவத்தின் 11-ஆம் இடமாக வரக்கூடிய, சனி பகவான் ஆளக்கூடிய ராசி கும்பம்.
இந்த ராசியினர் பிறக்கும் போது ஓரளவு வசதியாக இருந்தாலும், வளர வளர இவர்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.
இவர்கள் புத்திசாலித்தனமான வேலையின் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருப்பார்கள்.
இதுவே இவர்களை உயிர் வாழ செய்கிறது. கடினமான பிரச்சனைகளை தாங்கவும் வைக்கிறது.
எந்த ஒரு கடின சூழ்நிலைக்கு இவர்களின் தீர்வு காணும் அணுகுமுறையால் பல நேரங்களில் வெற்றிகளை பெற்று விடுகிறார்கள்.
கும்ப ராசியினர் அனைத்து விஷயங்களிலும் உன்னிப்பாக திட்டமிடக் கூடியவர்கள்.
அதனால் கடினமான சூழ்நிலை வராத அளவிற்கு செயல்படுவார்கள்.
தனுசு ராசி
தனுசு ராசி குருபகவான் ஆளக்கூடிய தனுசு ராசியினர் மிகுந்த மன நம்பிக்கையுடன் இருக்கக்கூடியவர்கள்.
ஜோதிடப்படி இந்த லக்னக்காரர்கள் சற்று மன குழப்பமான நபர்களாகவும், மற்ற கிரகங்களின் சுபத் தன்மையை குறைவாக கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றாலும், இவர்கள் நினைத்தால், இவர்களின் சிறப்பான ஒழுக்கத்தால் எந்த ஒரு கடின சூழ்நிலையும் சமாளிக்க முடியும்.
இவர்களிடம் நகைச்சுவை குணமும், சாகச சமண நிலையில் இருக்கும்.
எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமாக எடுத்து வெற்றி பெற நினைப்பார்கள்.
ஆனால் இவர்களிடம் தேவையான முக்கிய விஷயம் ஒழுக்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி புருஷ தத்துவத்தில் எட்டாம் ராசியாக வரக்கூடிய, செவ்வாய் பகவான் ஆளக்கூடிய ராசி விருச்சிகம்.
இவர்கள் நினைத்ததை செய்து முடிக்க கூடிய உந்துதல் ஆற்றலை செவ்வாய் தருவார்.
இவர்களிடம் தற்காப்பு உள்ளுணர்வு வேறொன்று இருக்கும்.
எந்த ஒரு பிரச்சனையையும், சோதனையையும் முன்னரே அறிந்து கொள்ளக்கூடிய உள்ளுணர்வு இருக்கும்.
கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாக சிந்திக்க கூடியவர்களாகவும், அதை எதிர் கொள்ளக்கூடிய திறமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
சுதந்திர மனப்பான்மை கொண்ட இவர்களிடம், ஆபத்தான திருப்பங்களை வீரத்துடன் எதிர்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் திறமை குறித்து தற்பெருமை காட்ட மாட்டார்கள்.
கன்னி ராசி
கன்னி ராசி கன்னி ராசி இயற்கையுடன் இணைந்து செயல்படக்கூடிய உள்ளார்ந்த ஆசை கொண்டவர்கள்.
புத்தி கூர்மை தரக்கூடிய புதன் பகவான் ஆழக்கூடிய கன்னி ராசியினருக்கு தனிமை மிகவும் பிடிக்கும்.
எந்த ஒரு கடினமான விஷயத்தை கற்றுக் கொள்வதற்கு உள்ளார்ந்த ஆசை மற்றும் அக்கறை இருக்கும். அதனால் எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராகி விடுவார்கள்.
தங்களின் பயத்தை போக்க நம்பிக்கையுடனும் திறமையுடனும் ட நினைப்பார்கள். அதன் மூலம் கடின சூழ்நிலையில் இருந்து வெளி வருவார்கள்.