கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகள் ; அதிரஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்
இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் பல முக்கியமான கிரகங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும்.
குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியிலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பர். சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அமைந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உள்ள கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கடகம் : தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
கன்னி : குருவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கு நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடைந்து மன திருப்தியைத் தரும்.
தனுசு : தொழிலதிபர்கள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.