மீண்டும் சீனாவில் வேகமாக பரவி வரும் கோவிட்: 60000 பேர் மரணம்
சீனாவில் வேகமாக பரவி வரும் கோவிட் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 60000 நெருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட் பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது.
கோவிட் பரவலைத் தடுக்க ஜீரோ கோவிட் என்ற கொள்கையை சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிப்பு
அதன்படி பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, வணிக ரீதியிலான பாதிப்பும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.