8 வயதில் தாயையும் மகளையும் பலாத்காரம் செய்தேனா? குமுறும் மொட்டு எம்.பி
கடந்த இரண்டு நாட்களாக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் மொட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க, சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து, தமக்கு கடந்த இரண்டு நாட்களாக கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொலைமிரட்டல் விடுத்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நாளை முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது வர் மேலும் கூறுகையில்,
8 வயதில் பலாத்காரம் செய்தேனா?
"1989 ஆம் ஆண்டு நான் ஒரு தாயையும் மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தேன் என்று கூறி இரண்டு முகநூல் பதிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
1989 இல் நான் 8 வயது சிறுவனாவேன் எனவும் அவர் கூறினார். எனவே இவ்விடயத்தில் சபாநாயகர் தலையிட்டு எனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கைக்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இந்த விடயத்தை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்ததுடன், இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார்.