விடுதலையானதும் விகாரைக்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க
சிறியிலிருந்து விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விடுதலையான பின்னர் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்றுள்ளார்.
கங்காராம ஆலய பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் உட்பட மகா சங்கத்தினர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்ட ராமநாயக்கவுக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.
அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிடைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.