பிரித்தானிய மகாராணி உயிரிழப்பு; ஜனாதிபதி ரணில் விடுத்த பணிப்புரை
1952-1972 காலப்பகுதியில் பொதுநலவாய தலைவரும் இலங்கை ராணியுமான இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் கொடியை தாழ்த்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அறிக்கை
“1952-72 ஆம் ஆண்டு காமன்வெல்த் தலைவரும் இலங்கை ராணியுமான எச்.எம். மகாராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) காலமானதையடுத்து, அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் தேசிய துக்கக் காலம் பின்னர் அறிவிக்கப்படும்” என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்திருந்தார்.
"1952-72 ஆம் ஆண்டு காமன்வெல்த் தலைவர் மற்றும் இலங்கை ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) எச்.எம். ராணியின் மறைவு குறித்து இங்கிலாந்து அரச குடும்பம், அரசு மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர்.
இங்கிலாந்தின் நீண்டகால மன்னரான இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) மகாராணி,1952 இல் அரியணைக்கு வந்ததோடு 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார்.